என்னது அமீர்-க்கு திருமணமா? பேட்டியில் உளறிய நடிகை பாவனி ரெட்டி..
சின்னத்திரை நடிகையாக சின்னத்தம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பாவனி ரெட்டி. சில வருடங்களுக்கு முன் முதல் திருமணம் செய்து கொண்ட பாவனி கணவர் இறந்ததால் தனியாக வாழ்ந்து சீரியலில் நடிக்காமல் இருந்து வந்தார்.
அதன் பின் சின்னத்தம்பி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார். வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நடனகலைஞர் அமீர் மீது காதலில் இருந்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடிகள் 2-வில் கலந்து கொண்டு முதல் இடத்தினை பிடித்தனர். இதுவரையில் பல முறை அமீர் பிரபோஸ் செய்தும் வெளிப்படையாக காதலை ஏற்காமல் இருந்து வந்தார் பாவனி. நிகழ்ச்சி முடிந்தப்பின் தான் அமீரை காதலிப்பதாக தகவலை வெளியிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கல்யாணம் என்று அர்ச்சகரை கூப்பிட்டு பிராங்க் செய்துள்ளனர். அப்போது பாவனி அடுத்த ஆண்டு கூப்பிடுகிறோம் இப்போ வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஆகையால் அமீரை அடுத்த ஆண்டு பாவனி திருமணம் செய்து கொள்வார் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.