எனக்கு தாம்பத்திய வாழ்க்கை வேணும்.. இரண்டாம் திருமணத்திற்கு தயாரான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி..
சினிமாவில் ஒன்றாக பணியாற்றும் பிரபலங்கள் காதலிப்பதும் திருமணம் செய்வதும் வழக்கமாக மாறிவிட்டது. அப்படி ரீல் ஜோடிகளாக நடித்து ரியல் ஜோடிகளாக மாறியவர்களில் ஒரு ஜோடி தான் பவன் கல்யாண் - ரேணு தேசாய். பத்ரி படத்தில் ஒன்றாக நடித்து வந்த இருவருக்கும் காதல் மலர்ந்து பின் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பே இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகன் பிறந்துள்ளது. திருமணத்திற்கு பின் ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தத இரு ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
பவன் கல்யாண் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, ரேணு இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். ஆனால், நிச்சயத்தார்த்தை ரத்து செய்துவிட்டு தனியாக வாழ முடிவெடுத்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை ரேணு இரு குழந்தைகளின் படிப்பு வளர்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் கண்டிப்பாக 2ஆம் திருமணம் செய்து கொள்வென் என்றும் தெரிவித்திருக்கிறார். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயம் திருமணம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் என் குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்பாளர் தேவைப்பட்டது. அவர்களுக்கு உதவி தேவை, திருமணம் செய்து கொண்டால் கணவருடன் நேரத்தை செலவிட வேண்டிருக்கும்.
இந்த செயலால் இரு குழந்தைகள் தனியாக இருக்கும் சூழல் உருவாகும் என்பதாலும் தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு நானும் இல்லை என்றால் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம் என்று தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தேன். 2 அல்லது 3 ஆண்டுகளில் குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள், கல்லூரிக்கும் சென்றுவிடுவார்கள். அப்போது எனக்கு நண்பர்கள் காதலர்கள் என்று புதிய உலகம் கிடைக்கும்.
நான் சுதந்திரமாக இருப்பேன், திருமணத்தை அனுபவிக்க முடியும், அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். கண்டிப்பாக 2. 3 ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வேன், எனக்கு திருமண வாழ்க்கை வேண்டும், எல்லா தாம்பத்திய வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவதாகவும் நடிகை ரேனு தேசாய் தெரிவித்துள்ளார்.
You May Like This Video