விவாகரத்தாகி 13 ஆண்டுகள்!! 43 வயதான பவன் கல்யாணின் முதல் மனைவி ரேணு தேசாயின் புகைப்படங்கள்..
பவன் கல்யாண் - ரேணு தேசாய்
சினிமாவில் ஒன்றாக பணியாற்றும் பிரபலங்கள் காதலிப்பதும் திருமணம் செய்வதும் வழக்கமாக மாறிவிட்டது. அப்படி ரீல் ஜோடிகளாக நடித்து ரியல் ஜோடிகளாக மாறியவர்களில் ஒரு ஜோடி தான் பவன் கல்யாண் - ரேணு தேசாய். பத்ரி படத்தில் ஒன்றாக நடித்து வந்த இருவருக்கும் காதல் மலர்ந்து பின் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு முன்பே இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகன் பிறந்துள்ளது. திருமணத்திற்கு பின் ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தத இரு ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
பவன் கல்யாண் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, ரேணு இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். ஆனால், நிச்சயத்தார்த்தை ரத்து செய்துவிட்டு தனியாக வாழ முடிவெடுத்தார்.
43 வயதாகும் ரேணு
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை ரேணு இரு குழந்தைகளின் படிப்பு வளர்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் கூட குழந்தைகள் பெரிதாகிவிட்டதால் எனக்கான ஒரு வாழ்க்கையில் துணை தேவை என்றும் திருமணம் செய்வேன் என்றும் கூறியிருந்தார்.
தற்போது 43 வயதாகும் ரேணு தேசாயின் புகைப்படங்களை பார்த்து அழகு குறையவில்லையே என்று கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.