உனக்கு வேற வேலையே இல்லையா? நல்ல கதையெல்லாம் இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க.?

pawankalyan vikramvedha remakemovie ravideja pink bheemla
By Edward Mar 11, 2022 06:55 AM GMT
Report

இந்திய சினிமாவில் இன்றைய காலக்கட்டத்தில் ரீமேக் படங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களை மாறிமாறி ரீமேக் செய்து வருகிறார்கள்.

அப்படி ரீமேக் படங்களே போதும் என்றளவுக்கு மாறி வருகிறார் தெலுங்கு நடிகர் பவண் கல்யான். தெலுங்கு படங்கள் என்றாலே மாஸ் கதையை கமர்சியலாக எடுத்து வெளியிடுவது பவன் கல்யாண் ஸ்டைலாக இருந்து வருகிறது.

அப்படித்தான் பிங்க் படத்தினை அப்படியே மாற்றி கமர்சியல் படமாக வக்கீல் சாப் படமாக மாற்றி தோல்வியை கொடுத்தது. ஆனால் அதே பிங்க் படத்தினை தமிழில் அஜித்தை வைத்து எச் வினோத் காப்பாற்றிவிட்டார்.

அதேபோல் சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பீம்லா நாயக் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் ஐப்பனும் கோஷியும் என்ற மலையாள படத்தின் ரீமேக்காக தெலுங்கில் உருவானது.

வில்லன் ஹீரோ இருவரும் அவர்கள் பார்வையில் நல்லவர்கள். ஆனால் அப்படியே படத்தின் கதையை உல்டாவாக மாற்றிவிட்டார் பவன் கல்யாண். இப்படியிருக்கையில், விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பவன் கல்யாண் மற்றும் ரவி தேஜா இணைந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறாரகளாம். இதையும் எப்படி மாற்றப்போகிறார் இந்த மனுஷன் என்று ரசிகர்கள். புலம்பி வருகிறார்களாம்.