மேடையில் நடிகையிடம் பிரபல நடிகர் செய்த செயல்? அதிர்ச்சியான நிவேதா தாமஸ் வீடியோ...

Nazriya Nazim Nivetha Thomas Pawan Kalyan Nani
By Edward Jun 13, 2022 08:39 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்திருப்பவர் நடிகை நஸ்ரியா. நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்த பிறகு குடும்பத்தை பார்த்து வந்த நஸ்ரியா தற்போது நடிகர் நானியுடன் இணைந்து அண்டே சந்தரானிக்கி என்ற படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் இன்று வெளியாகிள்ளது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவெண்ட் நேற்று நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தெலுங்கு நடிகர் பவண் கல்யாணும், நிவேதா தாமஸ் உட்பட பலர் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய பவண் பல்யாண், நஸ்ரியா, நானி உள்ளிட்ட படக்குழுவில் பணியாற்றியவர்களை பற்றி பேசிமுடித்தார். ஆனால் மேடையில் இருந்த நிவேதா தாமஸ் பற்றி பேச மறந்துவிட்டார். பின் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நிவேதா தாமஸ் வர அப்போது தான் நியாபகம் வந்திருக்கிறது பவண் கல்யாணுக்கு.

பின் மைக்கை கேட்டு பக்கத்தில் இருந்தவரை கூப்பிட்டு அவர் பெயர் என்ன என்று கேட்டுக்கொண்டுள்ளார். நிவேதா தாமஸ் பெயரை கூறி மன்னித்துவிடுங்கள், இவர்கள் நன்றாக நடித்து வருகிறார் என்று புகழ்ந்துள்ளார்.

உடனே நிவேதா தாமஸ் அதிர்ச்சியாக நன்றி என்று கூறியுள்ளார். நிவேதா தாமஸ் ஏற்கனவே வக்கீல் சாப் படத்தில் முக்கிய ரோலில் பல நாட்களாக அவருடன் நடித்திருந்தார். அப்படி இருக்கும் நிலையில் கூட பணியாற்றிய நடிகையின் பேர் கூட தெரியவில்லை என்று வீடியோவை பார்த்த பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.