"ஹிந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா".. தமிழர்களை தாக்கி பேசிய பவன் கல்யாண்
Pawan Kalyan
By Kathick
ஹிந்தி திணிப்பு பற்றிய பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தேசிய அளவில் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது, அது நடக்காது என பலரும், ஹிந்தி அவசியம் என சிலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகரும், ஆந்திராவின் தற்போதைய துணை முதல்வருமான பவன் கல்யாண் ஹிந்தி திணிப்பிற்கு ஆதரவு தெரிவித்து, தமிழர்களை தாக்கி பேசியுள்ளார்.
"தமிழ்நாட்டில் ஹிந்தி எங்களுக்கு வேண்டாம் என சொல்கிறார்கள். ஹிந்தியை திணிப்பதாக சொல்கிறார்கள். அப்போது முதலில் உங்கள் படங்களை ஹிந்தியில் டப் செய்வதை நிறுத்துங்கள், வடக்கில் இருந்து டெக்னீஷியன்களை இங்கே கொண்டு வராதீர்கள்.. ஹிந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா" என அவர் கேட்டிருக்கிறார்.