நடிகையின் இடுப்பை சீண்டிய நடிகர்!! கண்ணீர்விட்டு அழுத நடிகை அஞ்சலி..
அஞ்சலி ராகவ்
நடிகைகளுக்கு பொது இடத்தில் பிரபலங்களாலும் ரசிகர்களாலும் உடல்ரீதியான சீண்டல்கள் நடப்பது வழக்கம். அப்படி சமீபத்தில் போஜ்பூரி நடிகையான அஞ்சலி ராகவ் என்பவருக்கு மேடையில் நடிகரால் எல்லைமீறிய சம்பவம் நடந்துள்ளது.
ஒரு படத்தின் பாடல் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலி ராகவின் இடுப்பை குறிப்பிட்டு பேசிக்கொண்டே பவன் சிங் என்ற நடிகர், கிள்ளுவது போலவும் தொட்டு தடவிக்கொண்டே பேசியுள்ளார்.
இதனால் கோபப்படாமல் சிரித்துள்ள வீடியோ இணையத்தில் பரவியது. ஏன் அந்த நடிகரை கன்னத்தில் அடிக்காமல் சிரித்தார் என்றும் பலரும் விமர்சித்தனர்.
இதுபற்றி தனக்கு தெரியாமல் இருந்ததாகவும் மேடையில் பவன் சிங் தனது இடுப்பை குறிப்பிட்டபோது ஆடையின் டேக் என்று நினைத்து சிரித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
தன்னுடைய குழு உறுப்பினர் மூலம் அங்கு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தப்பின் மிகவும் கோபமடைந்ததாகவும் சம்மதம் இல்லாமல் யாரையும் தொடுவது தவறு என்றும் குறிப்பிட்டு அஞ்சலி ராகவ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பவன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.