காசு கொடுத்து தான் அதை செய்ய வைக்கிறார்கள்!! பிரியங்கா மோகன் ஓபன் டாக்

Priyanka Arul Mohan Tamil Actress Actress Social Media
By Edward Sep 19, 2025 08:30 AM GMT
Report

பிரியங்கா மோகன்

தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா மோகன். அமைதியான முக பாவணை, அழகான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தற்போது பவன் கல்யாணுடன் OG என்ற படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், வெளிநாடுகளுக்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

காசு கொடுத்து தான் அதை செய்ய வைக்கிறார்கள்!! பிரியங்கா மோகன் ஓபன் டாக் | Pay To Post Memes Against Me Priyanka Mohan Open

காசு கொடுத்து தான்

இந்நிலையில் பிரியங்கா மோகன், ஓ.ஜி படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில், சமூக ஊடகக் கணக்குளை நானே கையாள்வதில்லை, அதற்காக ஒரு குழுவை வைத்திருக்கிறேன். சோசியல் மீடியா தளங்களில் இருந்து நான் முடிந்தவரை விலகி இருக்கவே விரும்புகிறேன்.

ஏனென்றால் அவை அவசியமற்றவை என்று உணர்கிறேன். என்னுடைய வேலைகள் மற்றும் புகைப்படங்களை பதிவிட மட்டுமே அவை பயன்படுகிறது.

ட்ரோல்கள் குறித்தும், மீம்ஸ்கள் குறித்தும் கேட்கப்பட கேள்விக்கு, அது எல்லாமே பணம் கொடுத்து செய்யபடுவது தான், ஒருவரை தாக்க ட்ரோல்களுக்கு பணம் கொடுக்க முடியும் என்பது உங்களுக்கே தெரியும்.

என்னை பிடிக்காத அல்லது வெறுக்கும் ஒருவர், எனக்கு எதிராக எதிர்மறையான மீம்ஸ்களை பதிவிட பணம் கொடுக்கிறார் என்று கூறியிருக்கிறார் பிரியங்கா மோகன்.