18 வருஷமா என்ன மறந்துட்டியே தளபதி! விஜய்க்காக ஏங்கி தவிக்கும் பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் கிராமத்து சாயலில் கமர்ஷியல் படங்கள் பல வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தன. அதில் மாஸ் நடிகர்களை வைத்து கமர்ஷியலாக எடுத்த இயக்குனர் லிஸ்ட்டில் இருப்பவர் இயக்குனர் பேரரசு.
நடிகர் விஜய்யின் திரை வரலாற்றில் மாஸ் படத்தை கொடுத்த பெருமையும் பேரரசுக்கு உண்டு. திருப்பாச்சி, சிவகாசி என தென்னக ஊர்களின் பெயரை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.
2005ல் இப்படம் மிகப்பெரிய வெற்றியோடு விஜய்யின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. யார் கண் பட்டதோ தெரியவில்லை 18 வருடங்களாக பேரரசு பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார் விஜய். பட வாய்ப்பு குறித்தி சமீபத்தில் பேரரசு பேட்டியொன்றில் கூறியதாவது,
விஜய்க்காக 3 கதை ரெடியாக இருக்கிறது. 2 வருடங்களாக அவரை கவனித்தே வருகிறேன். நான் ரெடி என்று அவரிடம் கூறிவிட்டேன், ஆனால் தற்போது அவரது பட்ஜெட் மார்க்கெட் வேறு என்பதால் விஜய் கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பார்.
அப்படி அவர் கூப்பிட்டால் அதற்காகவும் நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.