கொரோனாவால் அஜித்பட நடிகையின் சகோதரர் மரணம்! 7 வாரமாக டெஸ்ட்டிற்காக காத்திருக்கும் பரிதாபநிலை
தமிழ் சினிமாவில் ஏகன், கோ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பியா பாஞ்பேய். சமீபகாலமாக படங்கள் இல்லாமல் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் பியா.
கடந்த வாரம் அவரின் சகோதரருக்கு கொரோனா வைரஸ் வந்து பின் உயிரிழந்துள்ளார். மருத்துவ உதவி கிடைக்காமல் தான் சகோதரர் இறந்தார் என்று நடிகை பியா கூறியிருந்தார்.
இந்நிலையில் தன் குடும்பத்தினர் அனைவரும் கொரானா டெஸ்ட் எடுத்து கொண்டோம். 7 நாட்கள் ஆகியும் அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை என்று புகாரளித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் பியா. மேலும் குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற பிரபலங்களுக்கே இப்படியென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
Did my full family COVID test (RT PCR) on 7th May..today is 13th n no report nothing..it’s pin drop silence..by god grace my family is safe..पर अगर result देने ही नहीं हैं तो test क्यूँ करने #Etawah
— Pia Bajpiee (@PiaBajpai) May 13, 2021