வீட்டை விட்டு ஓடி வந்து, ரயில் நிலையத்தில் 2 நாள் தூங்கிய ஏகன் பட நடிகை! - அதிர்ச்சி தகவல்
Piaa Bajpai
By Parthiban.A
தல அஜித்தின் ஏகன் படத்தில் ஒரு ரோலில் நடித்து இருந்தவர் பியா பாஜ்பாய். இவர் அதன் பின் கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அவர் இளம்வயதில் நடிக்க வரும் முன்பு வீட்டை விட்டு ஓடிவந்தது பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
"எனக்கு 15 வயது இருக்கும்போது நான் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றேன். தங்குவதற்கு இடம் இல்லாததால் இரண்டு இரவு டெல்லி ரயில் நிலையத்திலேயே தூங்கினேன். எப்படியோ மும்பை சென்று அங்கு வீடு கிடைக்காமல் அலைந்தேன். அதன் பின் ஒரு வீட்டில் உரிமையாளரின் நாய் இருக்கும் அறையில் அதனுடன் 9 மாதங்கள் இருந்தேன். அதனை போராட்டங்களுக்கு பிறகு தான் நல்லது நடந்தது" ஏன் பியா பாஜ்பாய் கூறி இருக்கிறார்.
