வீட்டைவிட்டு ஓடி நாயுடன் 9 மாதங்கள் வாழ்ந்த அஜித் பட நடிகை! உருக்கமான வீடியோ..

Ajith Kumar Piaa Bajpai
By Edward Apr 25, 2022 01:15 PM GMT
Report

தமிழில் 2008ல் வெளியான பொய் சொல்ல போறோம், ஏகன், கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பேய். இப்படங்களுக்கு பிரகு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.

படவாய்ப்புகள் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கம் சென்ற பியா க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தான் சிறுவயதில் பட்ட கஷ்டங்களை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

15 வயதாக இருக்கும் போது தன்னுடைய விட்டினை விட்டு வெளியேறி இடம் கிடைக்காமல் ரயில் நிலையத்திலேயே இரு நாட்கள் தங்கினேன்.

அதன்பின் ஒருவரின் உதவியால் நாய் தங்கும் அறையில் 9 மாதங்கள் அதனுடன் வாழ்ந்தேன் என்று கூறியுள்ளார். எப்படியாவது வாழ்க்கை மாறும் என்று நினைத்து கஷ்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.