பிச்சைக்காரன் கதையை தூக்கி எறிந்த நடிகர்!! டக்கர் பதிலளித்த பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சசி. சொல்லாமலே படத்தின் மூலம் அறிமுகமாகிய சசி அதன்பின் சீனு, ரோஜா கூட்டம், டிஸ்யூம், பூ, 555, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களை இயக்கினார்.
தற்போது இயக்குனர் சசி நடிகர் சித்தார்த்-யுடன் கலந்து கொண்ட பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ல் பிச்சைக்காரன் வெளியானது.
ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சித்தார்த் தானாம். அவர் கூறுகையில், 2000 நோட்டுக்கும் சித்தார்த்துக்கு சம்மந்தம் இருக்கிறது.
2008ல் இந்த கதையை சித்தார்த்திடம் கூறினேன். ஆனால் இது என் இடத்தில் இருந்து எல்லோரும் யோசிக்கனும் என்று சித்தார்த் குறுக்கிட்டு பேசினார்.
அந்த படத்தில் ஒரேவொரு சீன் மட்டும் எனக்கு நியாபகம் இருக்கு, அது தான் ஒரு கருவாக மாறி பிச்சைக்காரன் படமாக மாறியது என்று சசி மற்றும் சித்தார்த் கூறியுள்ளனர்.