கையில் சிகரெட்! நடிகையின் பாத்டப் புகைப்படத்தை வெளியிட்ட பிசாசு இயக்குநர்...
andrea
poorna
sakshiagarwal
mysskin
pisasu2
By Jai
தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று புதியவகையில் எடுத்து இயக்கி வருபவர் இயக்குநர் மிஸ்கின். பல வெற்றிப்படங்களுக்கு பிறகு பிசாசு முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து பிசாசு 2 படம் எடுப்பதாக கூறி அறிவுத்தார் இயக்குநர் மிஸ்கின். பிசாசு 2வின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடித்துவிட்டதாகவும் சில போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டும் வருகிறார். ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், பூர்ணா உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு பெண் பாத்டப்பில் கையில் சிக்ரெட்டுடன் இருக்கும் புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள் இது யாரா இருக்கும் சாக்ஷியா, ஆண்ட்ரியாவா என கேட்டு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
