திருமணம் பிஸியில் உமாபதி படத்தை கவனிக்கல.. புலம்பி தள்ளிய தயாரிப்பாளர்
அண்மையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை உமாபதி ராமையா திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல உச்ச நடிகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சரவணன் , உமாபதி பித்தளை மாத்தி படத்தின் ப்ரோமோஷன் பணிக்கு வராததை தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், நடிகர் உமாபதி திருமணம் பிசியில் நடித்த படத்திற்கான புரமோஷன் பணிகள் எதுவும் செய்யவில்லை. எல்லா நடிகர்களும் இந்த படத்தை அப்படியே கை கழுவி விட்டனர்.
படத்தை காசு போட்டு தயாரித்த நான் மட்டுமே தியேட்டர் தியேட்டராக சென்று படத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். படத்தில் ஹீரோவாக நடித்த உமாபதி ஒரு வீடியோ ஒன்றை போட்டு இருக்கலாம். ரசிகர்கள் வந்து இருப்பார்கள். நான் சூப்பர் ஸ்டார் வைத்து படத்தை எடுக்கவில்லை ஒரு சாதராண நடிகர் வைத்து தான் படம் எடுத்து இருக்கேன்.
இந்த படம் எல்லாம் முதல் நாளிலே ஓடும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் கூட்டம் வரும். ஆனால் அதற்கு முன்பே படத்தை திரையரங்கில் இருந்து படத்தை நீக்கிவிட்டால் என்ன செய்வது என்று தயாரிப்பாளர் சரவணன் புலம்பியுள்ளார்.