பீட்சா சாப்பிடுவதற்கு பெண்களுக்கு தடையா! வித்தியாசமான கட்டுப்பாடுகளை அறிவித்த அரசு..
ஈரான் நாட்டில் ஐ.ஆர்.ஐ.பி., எனப்படும், இஸ்லாமிய ஈரான் குடியரசு ஒளிபரப்பு துறை, தொலைக்காட்சியில் தோன்றும் பெண்களுக்கான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு.
அந்த உத்தரவில் "தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண்கள், சிவப்பு நிறத்திலான எந்தவொரு உணவையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.
பெண்கள் கைகளில் கையுறைகளை அணிய வேண்டும். பீட்சா, சாண்ட்விச் போன்ற உணவுகளை சாப்பிடுவது போன்று தங்களை காட்டிக் கொள்ளக் கூடாது. பெண்களுக்கு தேநீர் கொடுப்பது போன்ற காட்சிகளில் ஆண்கள் நடிக்கக் கூடாது.
அவ்வாறு ஒளிபரப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு அனுமதி பெற வேண்டும்.
பாலின உறவுகளை தூண்டும் வகையிலான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த வழிமுறைகளை யாராவது மீறினால், அவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்" என அந்த புதிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.