இதுதான் அரசியல்! தளபதி விஜய் ஓட்டுபோட சைக்கிளில் வந்ததற்கு இவ்வளவு மர்மம் இருக்கா?
5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் மாலை 7 மணிக்கு ஆரம்பித்து சுமார் 40 சதவீதம் பேர் ஓட்டு போட்டுள்ள விவரம் வெளியானது. ஓட்டுப்போட பல பிரபலங்கள் திரைத்துறையினர் அவர்களது தொகுதி வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட்டு வருகிறார்கள். அந்தவகையில் காலை மணிக்கே தல அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் ஓட்டுப்போட்டனர்.
ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் காலை9 மணிக்குள்ளே ஓட்டுப்போட்டனர். தளபதி விஜய்யும் தன்னுடைய வாக்கினை அளிக்க புது யோசனையோ சைக்கிளில் களமிரங்கினார். அப்படி மற்றவர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வந்த விஜய்க்கு பின்னால் இப்படியொரு மர்மமான சவுக்கடியை கொடுத்துள்ளார். சமீபகாலமாக பெட்ரோல் டீசல் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
நமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை யோசிக்கவில்லை. இன்று எலக்சன் நாள் என்பதால் சரியான தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறியதை ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நினைவூட்டும் வகையில் தளபதி விஜய் சைக்கிளில் வந்ததாக கூறுகின்றனர். தற்போது, இணையத்தில் இதுபற்றி விமர்சனங்கள் எழுந்தவண்னம் உள்ளன.
Look at the grand entry ?@anirudhofficial music dhan set aahum. #TamilNaduElections ?#Thalapathy #Vijay @actorvijapic.twitter.com/2hoD7sBSM3
— S Abishek Raaja (@cinemapayyan) April 6, 2021