48 வயதான நடிகை ஐஸ்வர்யா ராய்-ஆ இது! உலக அழகினா சும்மாவா!!

Aishwarya Rai Ponniyin Selvan: I Mani Ratnam
By Edward Jul 07, 2022 05:40 AM GMT
Report

இந்திய திரையுலகில் உலக அழகி பட்டத்தை பெற்று மிகப்பெரிய பெருமையை தேடித்தந்த அழகிகள் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இருவர் என்ற படத்தின் மூலம் நடிகையாக இயக்குனர் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இப்படத்தினை அடுத்து இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு மகளை பெற்று மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யா.

48 வயதிலும் இன்னும் அழகு குறையாத ஐஸ்வர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்திலும் நடிக்கவுள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கதாபாத்திர போஸ்டர் படக்குழு வெளியிட்டு வருகிறது.

செப்டம்பர் 30 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலையில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி போஸ்டர் வெளியாகியுள்ளது. அழகின் ராட்சசி என்று ரசிகர்களால் புகழப்பட்டு இணையத்த்தில் ஐஸ்வர்யா ராயின் போஸ்டர் வைரலாகி வருகிறது.


Gallery