12 நாள் வசூலில் பொன்னியின் செல்வனிடம் அடிவாங்கிய கமலின் விக்ரம்.. கோடியில் மிதக்கும் லைக்கா
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவது பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய வசூலை பெற்று வருகிறது.
தமிழர்களின் பெருமையாக கருதப்பட்டு வரும் இப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் 402 கோடி ரூபாயை பெற்றுள்ளதாம். அதிலும் தமிழகத்தில் சுமார் 200 கோடி அளவில் வசூல் சாதனை பெற்றுள்ளது.
ஆனால் இரண்டாம் வாரத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் ஜூன் 3ல் வெளியான விக்ரம் படத்தின் வாழ்நாள் வசூலான 500 கோடியை இன்னும் முந்தவில்லை.
அதிலும் கன்னடத்தில் எதிர்ப்பார்ப்புகளோடு வெளியான பொன்னியின் செல்வன் வசூலில் Kantara படத்தின் வெளியீட்டால் அடிவாங்கி வருகிறது.
இது முழுக்க முழுக்க கன்னட சினிமாக்காரர்களின் சதியாக கருதி கருத்துக்களும் வைரலாகி வருகிறது. என்னதான் இருந்தாலும் தீபாவளி-க்கும் மேல் பொன்னியின் செல்வன் படம் திரையரங்கில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் 12 நாட்களில் 400 கோடியை பெற்ற பொன்னியின் செல்வன் இந்த மாத இறுதியில் 600 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
#PS1 ?️ hits another milestone!!
— Lyca Productions (@LycaProductions) October 12, 2022
4️⃣0️⃣0️⃣+ Cr Worldwide Gross ??✨
Catch the movie in theaters near you! ?️#PonniyinSelvan1 ?️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/GsfuVTtsBo