அஜித்துடன் அப்படியொரு ஆட்டம் போட்ட நடிகையா இது? 49 வயதில் நீச்சல் உடையில் நடிகை வெளியிட்ட புகைப்படம்..
அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தில் இடம்பெற்ற ஸ்மையை யை யை பாடலில் அஜித்துடன் நடனமாடி இருந்தவர் நடிகை பூஜா பத்ரா.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வந்தார்.
ஆனால், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பின் இவர் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 49 வயதாகும் நடிகை பூஜா பத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் அருவியில் குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
பூஜா பத்ரா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் பார்த்துவிட்டு அஜித்துடன் நடனமாடிய நடிகையா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே என கமன்ட் செய்து வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க..