தொடர் தோல்வியால் பரிபோன வாய்ப்புகள்!! ராசியில்லா நடிகையாக மாறிய விஜய் பட நடிகையின் தற்போதைய நிலை

Beast Pooja Hegde Indian Actress Actress
By Edward Apr 20, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ஒக்க லைல பாரோ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். சமீபத்தில் ராதேஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் சரியான பெயர் அவருக்கு அமையாமல் போனது.

தொடர் தோல்வியால் பரிபோன வாய்ப்புகள்!! ராசியில்லா நடிகையாக மாறிய விஜய் பட நடிகையின் தற்போதைய நிலை | Pooja Hedge Lost Her Market Due To Single Mistake

தொடர் தோல்வி படங்களால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து படங்கள் கையை விட்டு நழுவிக்கொண்டே போவதால் அவரின் மார்க்கெட்டும் சரிய தொடங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பூஜா ஹெக்டேவிற்கு படவாய்ப்புகள் அதிகளவில் வந்தும் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நிற்கும் அளவிற்கு அவரது கால்ஷீட் இருந்தது. ஆனால் தற்போது ஒரு படம் கூட வராமல் இருக்கிறது.

அவர் நடித்த 17 படங்களில் 10 படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வசூலை ஈட்டியது. வாய்ப்பில்லாமல் தற்போது வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையாவது பகிர்ந்து வருவார். ஆனால் தற்போது அதையும் விரக்தியில் குறைத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் மும்பையில் பிரபலங்கள் அதிகம் தங்கியுள்ள பந்த்ரா நகரில், ஆடம்பர வீட்டை 45 கோடிக்கு வாங்கிய பூஜா ஹெக்டேவை பலரும் கிண்டலடித்து வருகிறார்.

தொடர் தோல்வியால் பரிபோன வாய்ப்புகள்!! ராசியில்லா நடிகையாக மாறிய விஜய் பட நடிகையின் தற்போதைய நிலை | Pooja Hedge Lost Her Market Due To Single Mistake

ஈகா படத்தின் பட்ஜெட்டே 45 கோடி இருக்க பூஜா ஹெக்டே 45 கோடிக்கு பங்களா வாங்கியிருக்கிறார் என்றும் கலாய்த்து வருகிறார்கள். மேலும் பாமா குண்டூர் காரம் படத்தில் ஆரம்பத்தில் கமிட்டாகி பின் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகப்பட்டார். அதற்கு காரணம் உடல் நிலை பிரச்சனை என்றும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படத்தில் நடித்தால் திரைவாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடும் என்பதாலும் அப்படத்தில் நடிக்கவில்லையாம்.

கர்ப்பமாக இருக்கும் போது கணவர்.. முதல் பையன் அதனால் தான் இறந்துபோனான்!! நடிகை ரேஷ்மாவின் மறுபக்கம்..

கர்ப்பமாக இருக்கும் போது கணவர்.. முதல் பையன் அதனால் தான் இறந்துபோனான்!! நடிகை ரேஷ்மாவின் மறுபக்கம்..

தற்போது இளம் நடிகர் சித்து ஜொன்னலகட்டாவுடன் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறர். முதலில் பூஜா ஹெக்டே ரோலுக்கு நடிகை சமந்தா தான் தேர்வு செய்திருந்தார்கள். சில காரணங்களால் சமந்தாவால் முடியாது என்பதால் பூஜா ஹெக்டே கமிட்டாகி இருக்கிறார். இந்த படமாவது பூஜா ஹெக்டேவுக்கு சரியாக அமைந்து மார்க்கெட்டை அதிகரிப்பாரா என்ற கேள்வி எழுந்தும் ராசி இல்லா நடிகை என்ற பெயரை உடைப்பாரா என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

Gallery