கோடியில் புரளும் பூஜா ஹெக்டேவின் உதவியாளர்கள்.. அள்ளிக்கொடுக்கும் மகாராணி
தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பூஜா ஹெக்டே. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
தொடர் தோல்விக்கு பின்பும், தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியாக, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்போது 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பூஜா ஹெக்டேவிற்கு 4 கோடி ரூபாயும், அவருடைய உதவியாளர்களுக்கு ரூ. 1 கோடி ரூபாயும் சம்பளம் என்றும் தெரிவிக்கின்றனர். பூஜா ஹெக்டேவின் உதவியாளர்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமா என்று ரசிகர்களால் விழிபிதுங்கிவிட்டனர்.