பூஜா ஹெக்டே க்கு ஒரு ஓபனிங்-சீன் வெச்சுருக்கானுக பாரு? கலாய்க்கு ரசிகர்கள்

vijay master nelson poojahegde malavikamohanan beast
By Edward Apr 04, 2022 04:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கிறது.

கடந்த மாதத்தில் இருந்து அப்படத்தின் பாடல்கள் புகைப்படங்கள் என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்த படக்குழு இரு தினங்களுக்கு முன் பீஸ்ட் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பல பல விஷயங்களை ரசிகர்கள் ரசித்தாலும் சில விஷயங்களை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். விஜய்யின் மாஸ்டர் படத்தின் கதாநாயகியை கோடிகளில் சம்பளம் கொடுத்து ஏன் அந்த படத்தில் போதுமான காட்சிகள் கூட வைக்கவில்லை என்ற குறை இருந்தது.

அதே போல் பீஸ்ட் படத்திலும் பூஜா ஹெக்டேவை ஓரம்கட்டிவிட்டு விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. அப்படி இருக்க ஏன் விஜய் படத்தில் கதாநாயகிகளை எதற்கு யூஸ் பண்றாங்கனு தெரியவில்லை என்றும் புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

அப்படி பூஜா ஹெக்டேவின் ரோலை பற்றிய ஒரு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூஜா ஹெக்டே கேமியோ ரோலா இல்ல வேற எதாவதா என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

GalleryGalleryGallery