ராசியில்லாத நடிகையாக மாற்ற வைத்த சூப்பர் ஸ்டார் நடிகர்கள்! ஆச்சாரியாவை நம்பும் பூஜா..
தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான படம் முகமூடி. இப்படத்தின் மூலம் 2012ல் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படம் ஓரளவிற்கு கூட வரவேற்பு பெறாததால் பூஜா அக்கடதேசம் சென்று வாய்ப்பிற்காக் ஓடினார்.
அங்கு சென்ற 10 வருடங்களில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் கொடிக்கட்டி பறந்தார். இதன்மூலம் அல்லு அர்ஜுனனின் ஆள வைகுண்டபுரமுலு படத்தின் ஹிட் கொடுத்து சூப்பர் டூப்பர் நடிகையாக மாறினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிய பூஜா ஹெக்டேவின் சமீபத்தில் பிரபாஸ் மற்றும் விஜய் படங்களில் நடித்திருந்தார். பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் மிகப்பிரம்மாண்டளவில் 350 கோடி பட்ஜெட்டில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
அதேபோல் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் பூஜா நடிக்க அப்படமும் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பெரிய தோல்வியை சந்திக்க ஆரம்பித்த பூஜா ஹெக்டேவை ராசியில்லாத நடிகை என்று கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதனால் மார்க்கெட் குறையாமல் இருக்க கிடைக்கும் நேரத்தில் க்ளாமர் போட்டோஷூட்டினை இறக்கி வருகிறார்.
இதற்கு பூஸ்ட் கொடுக்கும் விதமாக சிரஞ்சீவி, ராம் சரண் நடித்து வெளியாகவிருக்கும் ஆச்சாரியா படத்திலும் பூஜா நடித்துள்ளார். இப்படம் கொடுக்கும் வெற்றியால் தான் பூஜா ஹெக்டேவின் வருங்காலமே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.