மனஉளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாக பரவிய வதந்தி!! விமர்சகர் மீது புகாரளித்த நடிகை பூஜா ஹெக்டே..
தமிழில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சரியான வரவேற்பு பெறாததால் தெலுங்கு பக்கம் சென்றவர் நடிகை பூஜா ஹெக்டே.
10 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டே, பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
கிளாமரில் எல்லைமீறிய ஆட்டம் போட்டோஷூட் என்று ரசிகர்களை ஈர்த்து வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் நடித்த பல படங்களில் தோல்வியை சந்தித்தது.
இதனால் பூஜா ஹெக்டே மன உளைச்சலில் இருந்து வந்ததால் தற்கொலைக்கு முயற்ச்சி செய்ததாகவும் குடும்பத்தினர் காப்பாற்றியதாக பிரபல விமர்சகர் உமைர் சந்து சமுகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
சமீபகாலமாக நடிகைகளை பற்றிய அவதூறு வார்த்தைகள் வதந்திகளை பரப்பி வந்துள்ளார்.
அந்த வகையில் தன்னை பற்றி தவறாக இணையத்தில் வதந்தி செய்தியை பரப்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை பூஜா ஹெக்டே, உமைர் சந்து மீது புகாரளித்துள்ளதை உமைர் சந்தே அவரது சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

