இறுக்கமான ஆடையில் மிரட்டும் நடிகை பூஜா ஹெக்டே.. ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழில் 2011ல் வெளியான முகமூடி படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் சரியான வரவேற்பை கொடுக்காததால், தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பினார்.
வளர்ந்து வரும் நடிகர்களுடன் ஜோடிப்போட ஆரம்பித்த பூஜா சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ஆல வைகுண்டபுரமுலு படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்தார். நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் கமிட்டாகி நடித்து மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.
அப்படம் சரியான வெற்றியை தராததை அடுத்து அதன்பின் நடித்த படங்களும் சரியாக ஓடாமல் போனது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, சல்மான் கானுடன் நடித்த படத்திற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.

அதற்காக கிளாமர் லுக்கில் சென்று எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது இறுக்கமான ஆடையில் ரசிகர்கள் வியக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.