அங்க ஒருத்தன் பூஜா ஹெக்டேவுக்கு லிப் லாக் கொடுத்துட்டான்..புலம்பும் நெட்டிசன்கள்..
பூஜா ஹெக்டே
பீஸ்ட், ஜனநாயாகன் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே, தற்போது பாலிவுட்டிலும் டாப் நடிகையாக திகழ்ந்து நடித்து வருகிறார்.

ஹ்ரித்தி ரோஷனுடன் மொகஞ்சதாரோ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிய பூஜா ஹெக்டே, தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் Hai Jawani Toh Ishq Hona Hai என்ற படத்தில் நடித்துள்ளார்.
வருண் தவானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவுடன் நடிகை மிருணாள் தாகூரும் நடித்துள்ள இப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் Tera Ho Jaun என்ற பாடல் வெளியாகியுள்ளது.
அதில், கிளாமர் லுக்கில், அதுவும் பிகினி அணிந்தபடி வருண் தவானுடன் ஆட்டம் போட்டியிருக்கிறார். அதோடுமட்டுமில்லாமல் வருணுடன் லிப்லாக்கிலும் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்க இங்க பாலிடிக்ஸ் சண்டை போட்டிகிட்டு இருங்க, அங்க ஒருத்தன் பூஜாவுக்கு லிப் லாக் அடிச்சிட்டான் என்று கூறி புலம்பி வருகிறார்கள்.