இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடிக்காமல் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே.. தவறிப்போன வாய்ப்பு

Vijay Beast Pooja Hegde
By Kathick Aug 07, 2022 11:45 AM GMT
Kathick

Kathick

Report

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. எலிஜிபிள் பேச்சுலர், பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சர்யா என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தோல்வியை தழுவி வருகிறார் பூஜா ஹெக்டே.

இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடிக்காமல் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே.. தவறிப்போன வாய்ப்பு | Pooja Hegde Missed To Act In This Superhit Movie

அதிலும், பெரிதாக தமிழ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது பூஜா ஹெக்டே தானாம்.

இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடிக்காமல் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே.. தவறிப்போன வாய்ப்பு | Pooja Hegde Missed To Act In This Superhit Movie

அப்போது கொரோனா தோற்று காரணமாக பூஜாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதனால், இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பூஜா தவறவிட்டுள்ளார். இதை அறிந்த நெட்டிசன்கள் பலரும், இப்படத்தை தவறவிட்டுவிட்டு, பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளாரே பூஜா ஹெக்டே என கலாய்த்து வருகிறார்கள்.