போகிற போக்கை பார்த்தா இங்கயே செட்டிலாகிடுவாங்கலோ? பூஜா ஹெக்டே போட்டோஷூட்..
முகமூடி படத்தின் மூலம் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்து சினிமாவில் எண்ட்ரியானார் நடிகை பூஜா ஹெக்டே. 2010 ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தமிழில் வரவேற்பு பெறாத பூஜா தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸி நடிகையாக இருந்து வருகிறார்.
12 வருட சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறக்கும் பூஜா கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து தமிழ் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வருகிறார்.
அதற்காக க்ளாமர் போட்டோஷூட் பீச் புகைப்படம் என வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அடுத்த மாதம் பீஸ்ட் படத்திற்காகவும் 11 ஆம் தேதி வெளியாகவுள்ள ராதே ஷ்யாம் படத்தின் பிரமோஷனுக்காகவும் சென்னை - ஹைதராபாத் என பறந்து வருகிறாராம்.
அப்படி பீஸ்ட் வெற்றியை கொடுத்து பூஜா ஹெக்டே பேசப்பட்டால் அடுத்தடுத்த வாய்ப்பினை தமிழ் தயாரிப்பாளர்கள் பார்வை அவருக்கு செல்லுமாம்.