இந்த விசயத்தில் நயன்தாராவை ஓரங்கட்டிய விஜய்பட நடிகை! சமந்தா கூட இல்லயாம்?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகைகளாக பலர் இருந்தனர். அதில் நம்பர் ஒன் நடிகையாக இன்று வரை தன் ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் தான் நடிகை நயன் தாரா. ஹீரோயின்களுக்கு நடுவிலும் பெரிய போட்டி இருந்துகொண்டு தான் இருக்கிறது.
அதிலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா தான் அதிக காலம் தென்னிந்தியாவில் முன்னணியில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி பூஜா ஹெக்டே முதலிடம் பிடித்து இருக்கிறார். பீஸ்ட் படம் பிளாப்பாகினாலும் அப்படத்திற்காக பூஜா ஹெக்டே 5 கோடி சம்பளமாக பெற்று நயன் தாராவை ஓரங்கட்டி இருக்கிறார்.
இதற்கு காரணம் நயன் தாரா இதுவரையில் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் நடித்து வந்ததால் தானாம். ஆனால் சமந்தா புஷ்பா படத்தில் 5 கோடி சம்பளமாக ஊ அண்டவா மாமா பாடலின் குத்தாட்டத்திற்காக பெற்றாலும் ஒரு படத்தின் நடிப்பினை வைத்து தான் படங்களில் நடிகை வாங்கும் சம்பளம் கணிக்கப்படும்.
அப்படியென்றால் புஷ்பா படத்தின் மார்க்கெட்டுக்கு காரணமாக சமந்தாவும் ஒரு காரணமாக இருப்பதால் இந்த சம்பளத்தை பெற்றுள்ளார். மேலும், ஷாருக்கான் படத்திலும் அஜித் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கும் நயன் தாரா 10 கோடி சம்பளமாக பெறவுள்ளார்.