51 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் அந்த ஹீரோ தெரியுமா

Pooja Hegde
By Kathick Apr 21, 2025 03:30 AM GMT
Report

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் ரெட்ரோ படம் வருகிற மே 1 வெளிவரவுள்ளது.

இதை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

51 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் அந்த ஹீரோ தெரியுமா | Pooja Hegde Pair Up With 51 Aged Actor

அதன்படி, கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் கிச்சா சுதீப்புடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம் பூஜா. அனுப் பந்தரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் பில்லா ரங்கா பாட்ஷா.

இப்படத்தில் பூஜா ஹெக்டேவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளிவருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.