நயன்தாரா நம்பர் 1-லாம் கிடையாது! பொறாமையில் பொங்கும் நடிகை பூஜா ஹெக்டே..

samantha nayanthara poojahegde tamilactress radheshyam No.1
By Edward Mar 06, 2022 11:20 PM GMT
Report

தமிழில் முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. படம் சுமாரான வரவேற்பு பெற்றதால் பூஜா பெரியளவில் கவனிக்கப்படாமல் இருந்தார். அதன்பின் தெலுங்கு பக்கம் சென்ற அவர் அங்கு முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தற்போது டாப் முதல் இடத்தினை பிடித்துள்ளார். தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே நடிகை சமந்தாவுடன் சண்டையிட்டு சர்ச்சையில் சிக்கியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படியிருக்கையில் ராதே ஷ்யாம் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளத்தபோது நம்பர் 1, நம்பர் 2 இடத்தில் இருக்கும் நடிகைகள் பற்றி எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

படத்தின் வெற்றியை குறித்து அந்த இடம் மாறிக்கொண்டே தான் இருக்கும். எனக்கு அந்த ஆசையில்லை. ரசிகர்களுக்கு பிடித்தது போல் நடிக்க வேண்டும். அப்படித்தான் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறேன். நயன் தாரா நம்பர் 1 நடிகை என்று கூறி வருகிறார்கள்.

அந்த இடம் நிலை அல்ல அதில் ஆர்வமும் இல்லை என்று கூறியுள்ளார். இப்படி தமிழில் ஆரம்பித்த ஒரே படத்தில் இப்படியாக கொடிக்கட்டி பறக்கும் நம்பர் 1 நம்பர் 2 நடிகைகளான நயன் தாரா சமந்தாவை வம்புக்கு இழுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.