நடிகை பூஜா ஹெக்டே காதலிக்கிறாரா..? யாருப்பா அந்த கொடுத்துவெச்ச ஆளு
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.
ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது தமிழ் திரைப்படம். இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்திருந்த பூஜா, மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தமிழில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம்.
இப்படத்தின் பேட்டி ஒன்றில் யாரை காதலிக்கிறீர்கள் என்று பூஜாவிடம் கேள்வி கேட்டதற்கு, " காதலிக்க நேரமில்லை. ஒரு வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் நடித்து வருகிறேன். காதலிக்க நிறைய நேரம் தேவைப்படும், அப்போதுதான் காதல் வளரும். ஆனால், இப்போது எனக்கு அதற்கான நேரமில்லை," என்று பதிலளித்துள்ளார்.