ஃப்ளாப் நாயகியுடன் ஜோடி சேரும் சூர்யா.. யாருனு தெரியுமா

Suriya Pooja Hegde
By Kathick Jul 03, 2022 01:52 PM GMT
Report

பாலா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஞானவேல் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க பிரபல முன்னணி நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக நடிகை பூஜா ஹெக்டேவின் நடிப்பில் வெளிவரும் பீஸ்ட், ஆச்சாரியா, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.