என்ன இப்படி பார்த்திருக்கவே மாட்டீங்க! குழந்தைக்கு பின் கமல் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டில் வெளியான காதல் ரோஜாவே படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை பூஜா குமார். இதையடுத்து மேஜிக் மேஜிக் 3 டி படங்களில் நடித்த பின் அமெரிக்கா சென்று அங்குள்ள ஆங்கில படத்தில் நடித்து வந்தார்.
பின் மீண்டும் தமிழகம் பக்கம் வந்து உலக நாயகன் கமல் ஹாசனின் உத்தம வில்லன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதிலிருந்து கமலுடன் லிவ்விங் டுகெதரில் ஊர் சுற்றி கிசுகிசுக்களில் மாட்டினார். விஷ்வரூபம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்து சர்ச்சையிலும் சிக்கினார்.
சமீபத்தில் கமல் நல்ல நண்பர் தான் என்று பல்டியடித்து கதையை மாற்றினார். பின் இளம் நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி சென்று கொண்டிருக்க திடீரென எனக்கு குழந்தை பிறந்தது என்று கணவருடன் புகைப்படத்தை வெளியிட்டு இந்திய சினிமாவிற்கே அதிர்ச்சியளித்தார்.
இந்நிலையில் கர்ப்பமாகி இருக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் குழந்தையில் தான் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் பூஜா குமார்.