பெண்களிடம் ஜாக்கிரதையா..உஷாரா இருங்க!! நடிகை பூனம் பாஜ்வா அட்வைஸ்..

Poonam Bajwa Relationship Tamil Actress Women
By Edward Mar 17, 2026 04:30 PM GMT
Report

பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

பெண்களிடம் ஜாக்கிரதையா..உஷாரா இருங்க!! நடிகை பூனம் பாஜ்வா அட்வைஸ்.. | Poonam Bajwa Warns Gents From Girls Relationship

ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். இதனையடுத்து 4 ஆண்டுகளுக்கு மேல் படவாய்ப்பில்லாமல் இருக்கும் பூனம் பாஜ்வா, லிவ்விங் வாழ்க்கையிலும் வாழ்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, ரசிகர்களிடம் உரையாடும் போது, சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பெண்களிடம் ஜாக்கிரதையா..உஷாரா இருங்க!! நடிகை பூனம் பாஜ்வா அட்வைஸ்.. | Poonam Bajwa Warns Gents From Girls Relationship

பெண்களிடம் ஜாக்கிரதையா

அதில் பூனம் பாஜ்வா, உங்களுடன் தோழியாக, காதலியாக, மனைவியாக பயணிக்கும் பெண்கள் எந்தவொரு தேசத்திற்கும் மகாராணியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களை ராணிகளாக போற்றி கொண்டாடுங்கள். அவர்களின் அழகையும், அன்பையும், ஆளுமையையும் பாராட்டுங்கள்.

ஓகே எல்லாத்தையும் மறந்துவிடலாம் என்று சொல்லும் பெண்களிடம் உஷாராக இருங்கள், ஏனென்றால் பெண்கள் எதையும் மறப்பதில்லை. குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் வரும் மற்ற பெண்கள் சார்ந்த விஷயங்களை மறக்கவே மாட்டார்கள். எனவே பெண்களிடம் உஷாராக இருங்கள், ஜாக்கிரதை என்று பூனம் பாஜ்வா தெரிவித்துள்ளார்.