60 வயதான மூத்த நடிகர் படத்தில் 31 வயது நடிகை! அவருக்காகவே நடிகைகளை அள்ளிக்குவிக்கும் இயக்குநர்..
தெலுங்கு சினிமாவின் படங்கள் ரியாலிட்டியாக இல்லாமல் நடிகர்களுக்கு ஏற்ற வகையில் பில்டப் சண்டை காட்சிகள் அமையும். அந்த அளவிற்கு முன்னணி நடிகர்கள் படத்தில் அப்படியான ஆக்ஷன் காட்சிகள் எடுக்க நடிகர்களும் ஒப்பிக்கொள்வார்கள்.
அந்தவகையில், பெரும்பாலான காட்சிகள் மிரட்டும் அளவிற்கு எடுக்கப்பட்ட படங்களில் மூத்த நடிகர் லிஜெண்ட் பாலகிருஷ்ணா படத்தில் இருக்கும். பாலகிருஷ்ணா படம் என்றாலே நடிகைகள் முதல் துணை நடிகர்கள் வரை அனைவரும் பயப்படுவார்கள்.
அதற்கு காரணம் தனக்கு கோபம் வந்து விட்டால் யார் எவர் என்று பார்க்காமல் அறைந்து விடுவார் என்பது தான். அப்படியிருந்தும் பாலகிருஷ்ணா படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசை அனைத்து தரப்பு நடிகைகளுக்கும் இருக்கும். அப்படி பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பூர்ணா.
அகந்தா எனும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு (வயது 60) ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
இப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணாவிற்கு ஒரு புதிய திருப்பமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து கூறியுள்ளார்.