ஆடையின்றி நடிக்க சொன்ன இயக்குனர்! கதை சூப்பராக இருந்தாலும் நடிகை எடுத்த முடிவு
சினிமாவில் நடிகைகள் க்ளாமர் காட்டுவதற்கு தற்போது தயங்குவது கிடையாது. அதேபோல் கதைக்காக ஆடையின்றியும் படுக்கை காட்சிகளிலும் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து கொடுக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த பழக்கம் தமிழ் சினிமாவில் பரவலாக காணப்படுகிறது.
சமீபத்தில் முன்னணி நடிகைகள் கூட கதைக்காக க்ளாமர், படுக்கையறை, ஆடையின்றி நடிக்கும் காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொள் கிறார்கள். அப்படி நடிகை பூர்ணா ஆடையின்றி நடிக்க கூறிய இயக்குனரிடம் நோ என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.
காலேஜ் குமரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஷாம்னா கசிம் என்கிற பூர்ணா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் நடித்த விசித்திரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியொன்றில் கலந்து கொண்ட பூர்ணாவிடம் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா ஆடையின்றி நடிக்க வறுபுறுத்தினார்கள் என்று கூறியதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார் பூர்ணா. பின் உங்களுக்கும் இது போன்று ஆடையில்லாமல் நடிக்க யாராவது அணுகி இருக்கிறார்களா என்று கேட்டுள்ளனர். ஆம் என பதில் கூறியதுடன் ஒரு இயக்கினர் என்னிடம் கதை கூறினார்.
கதை நன்றாக இருந்ததால் ஓகே என்று கூறினேன். ஆனால் படத்தில் ஆடையின்றி நடிக்கும் காட்சிகள் இருக்கும் என்று கூறியதும் நான் வேண்டவே வேண்டாம் என்று கூறி விலகிவிட்டேன். கதை ரொம்பவே பிடித்திருந்தது. ஓடிடி தளத்தில் கதையின் முக்கிய காட்சியாக இருந்தாலும் அப்படியாக மறுத்துவிட்டு ஃபீல் பண்ணினேன் என்று கூறியுள்ளார் அபர்ணா.