நீச்சல் ஆடை கொடுத்த இயக்குனர்.. முடியவே முடியாதுன்னு சொன்ன நடிகை பூர்ணிமா!! கோபப்பட்ட பிரபல இயக்குனர்..
80, 90களில் முன்னணி நடிகையாக இருந்து டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணிமா. பல படங்களில் நடித்து வந்த பூர்ணிமா, இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தனு, சரண்யா என்ற இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது சீரியல்களிலும் படங்களில் குணச்சித்திர ரோலிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை அம்புகாவுடன் இணைந்து அளித்த பேட்டியொன்றில், சிவக்குமார் சார் படத்தின் ஷூட்டிங்கிற்காக சிங்கப்பூர் போயிருந்தோம். நீச்சல் குளத்தை சுற்றி டயலாக் ஷூட் எடுத்திருந்தார்கள். அப்போது இயக்குனர் என்னிடம் மேடம் ஸ்விம்மிங் காஸ்டியூம் போட்டு வாங்க என்றார். அதெல்லாம் நான் போடமாட்டேன் என்று கூறிவிட்டேன். நான் அதை செய்ய மறுத்ததால் சிவக்குமார் சாருக்கு ஸ்விம் ஷூட் கொடுத்துவிட்டார்கள்.
இப்போது வரை அதை சிவக்குமார் சார், நீ போடாததால் என்னை போடவிட்டாங்க என்று கூறுவார் என்று சிரித்த படி கூறினார். அதன்பின் பேசிய நடிகை அம்பிகா, வரும் போதே ஸ்விம்மிங் ட்ரெஸ் இருக்கான்னு கேட்டுவிடுவோம், முடியாது என்றால் இந்த கேரக்டருக்கு ஸ்விம்மிங் ஆடை போடனும் என்று சொல்லி வேறு ஒரு நடிகையை பார்க்கிறோம் என்று சொல்லி விடுவார்கள்.
ஷூட்டிங் போன இரு நாட்களில் நம்மை மாத்தி விடுவாங்களா என்று எல்லா ஹீரோயின்களுக்கும் இருக்கும். கட்டாயப்படுத்தி போட சொல்லும் இயக்குனர்கள் அப்போது இல்லை, ஹீரோக்கள் மாட்டிப்பார்கள் என்று அம்பிகா கூறியிருக்கிறார். இதனால் நான் மூன்று நாள் தூக்கமில்லாமல் இருந்தேன் என்று பூர்ணிமா கூறியிருக்கிறார்.