கமல் ஒரு குடிகார.. பூர்ணிமா, நீயாமா இப்படி பேசுனா..

Bigg Boss Poornima Ravi
By Kathick Nov 22, 2023 11:20 AM GMT
Report

கமல் ஹாசன் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால் அதை அப்படியே கேட்டு நடக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களை தான் நாம் பிக் பாஸ் சீசன் 6 வரை பார்த்து இருக்கிறோம். ஆனால், முதல் முறையாக கமல் சொல்வதை தவிர மற்ற அனைத்து விஷயங்களையும் செய்யும் போட்டியாளர்கள் பிக் பாஸ் 7ல் தான் இருக்கிறார்கள்.

முதலில் விதி மீறல்கள் செய்தனர். இதை கமல் ஹாசன் கண்டித்து, இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என கூறினார். அதன்பின் தரைகுறைவான வார்த்தைகள் பேசுவது குறித்து சர்ச்சை வந்தது. இது போன்ற விஷயங்கள் குறித்து கமல் பல முறை போட்டியாளர்களிடம் பேசி எச்சரித்த பிறகும் கூட யாரும் கேட்பதாக தெரியவில்லை. குறிப்பாக பூர்ணிமா மற்றும் மாயா.

இவர்கள் இருவரும் அவ்வப்போது தனியாக போய் பேசுவது. மைக் ஆஃப் செய்து ஓரமாக வைத்துவிட்டு பிரைவேட் விஷயங்கள் குறித்து பேசுவது. மற்ற போட்டியாளர்கள் பற்றி கிசுகிசு பேசுவது என பல விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளது.

கமல் ஒரு குடிகார.. பூர்ணிமா, நீயாமா இப்படி பேசுனா.. | Poornima Talks Badly About Kamal Haasan

இதில் இதுவரை போட்டியாளர்களை மட்டுமே திட்டி தீர்த்தி பேசி வந்த பூர்ணிமா முதல் முறையாக கமல் ஹாசனை திட்டி பேசியுள்ளார். பூர்ணிமா மற்றும் விக்ரம் இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது, கடந்த வாரம் தனக்கு கமல் சார் செய்தது மிகவும் தவறான விஷயம் என்றும், இரு பக்கமும் தவறு இருக்கிறது, அதை அவர் சரியாக விசாரிக்கவில்லை என பூர்ணிமா குற்றம் சாட்டினார்.

அதன்பின் அவர் குடிகார Uncle என கூறினார் பூர்ணிமா. கமல் ஹாசனை குறிப்பிட்டு தான் பூர்ணிமா இப்படி பேசினார் என நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள். வடிவேலு சொல்வது போல் 'அந்த கரடி உன்னையும் விட்டுவைக்கலையா' என்ற கதை தான் இங்கு நடந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களே பாருங்க..