நம்ம குட்டி கல்யாணியா இது? படவாய்ப்பில்லாமல் கடைசியில் இந்த தொழிலுக்கு இறங்கிட்டாங்களே
குட்டி நட்சத்திரமான அறிமுகமாகி சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமானவர்கள் பலர். அப்படி நடிகர் பிரபு தேவாவின் அல்லி தந்த வானம் படத்தில் சிறுமியாக நடித்தவர் நடிகை பூர்ணித்தா கல்யாணி.
இப்படத்திற்கு பிறகு ஸ்ரீ, ரமணா, ஜெயம் உள்ளிட்ட சில படங்களில் குட்டி நட்சத்திரமாக வும் மறந்தேன் மெய்மறந்தேன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த கல்யாணி ரோஹித் என்பவரை 2013ல் திருமணம் செய்து கொண்டார்.
தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். இதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையில் தொகுப்பாளினியாக தனியார் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது மீண்டும் அதை தொடர்ந்துள்ளார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பிரமோஷனுக்காக விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவனை பேட்டி எடுத்துள்ளார்.