நடிகை சிம்ரனை வெறித்தனமாக காதலித்த வாரிசு நடிகர்.. செம கடுப்பான கேப்டன் விஜயகாந்த்

Vijayakanth Simran
By Kathick Aug 09, 2022 11:30 AM GMT
Kathick

Kathick

Report

90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் நடிப்பில் தற்போது அந்தகன், கேப்டன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளியாக காத்திருக்கிறது. நடிகை சிம்ரன் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் மாஸ்டரை திருமணத்திற்கு முன் காதலித்து வந்தார்.

ராஜு சுந்தரம் பிரபல நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த சமயத்தில் சிம்ரன் கதாநாயகி நடிக்கும் பல படங்களில் நடன இயக்குனராக ராஜு சுந்தரம் பணிபுரிந்துள்ளார்.

அப்போது ஒரு படத்தின் பாடல் படப்பிடிப்பின் போது, தனது காதலி சிம்ரனை ஒரு பக்கம் ஆட வைத்தும், ஹீரோ விஜயகாந்தை வேறொரு இடத்தில் தனித்தனியாக ஆட வைத்து பாடலை இயக்கியுள்ளார் ராஜு சுந்தரம்.

இதை கவனித்த விஜயகாந்த், ராஜு சுந்தரத்தை அழைத்து ஹீரோவையும் ஹீரோயினியையும் தனித்தனியாக ஆடவைத்து எடுத்தால் என் ரசிகர்களுக்கு பிடிக்காது. ஒன்றாக ஆட வைத்து எடுங்கள் என்று எச்சரித்து கூறினாராம் விஜயகாந்த். அதன்பின், இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடலை எடுத்துள்ளார் ராஜு சுந்தரம்.