விஜய், சங்கீதா பிரிவுக்கு இந்த நடிகை தான் காரணமா? உண்மையை உடைத்த பிரபல பத்திரிகையாளர்
நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை என்றும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது யாவும் உண்மையில்லை, வெறும் வதந்தி மட்டுமே என அதன்பின் கூறப்பட்டு வந்தது.
சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து திடீரென நடிகை திரிஷா கிளம்பினார். அங்கிருந்து புறப்பட்ட திரிஷா, மும்பை விமான நிலையத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டார். இதன்மூலம் திரிஷாவிற்கும் படக்குழுவிற்கும் இடையே ஏதோ பிரச்சனை என கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், காஷ்மீர் குளிர் தாங்க முடியாமல் தான் திரிஷா அங்கிருந்து புறப்பட்டு சென்றார் என கூறப்பட்டது. இதன்பின் சில நாட்களில் மீண்டும் காஷ்மீர் சென்றுவிட்டார் திரிஷா. இந்நிலையில், நடிகை திரிஷா ஏன் திடீரென காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி மும்பை சென்றார் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது : 'லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து திரிஷா திடீரென கிளம்பி மும்பைக்கு சென்றதற்கு காஷ்மீரின் குளிர் மட்டும் காரணம் இல்லை. அங்கு எதோ ஒரு பிரச்சனை நடந்துள்ளது. விஜய் குடும்பத்தில் ஒரு சலசலப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. நடிகை திரிஷா தான் அந்த சலசலப்புக்கு காரணம் என்பது போல் தெரிவிக்கின்றனர். இவர் காஷ்மீர் சென்றதும், எதோ ஒரு அழுத்தம் சென்னையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே திரிஷா படப்பிடிப்பில் இருந்து கிளம்பினார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், இவை யாவும் உண்மையில்லை என்று லியோ படக்குழு மருத்துள்ளதாகவும்' அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.