விஜய் - சங்கீதா விவாகரத்து.. நெருக்கமான இடத்திற்கு வந்த திருமணம் ஆகாத 39 வயது நடிகை

Vijay Trisha Sangeetha Vijay
By Kathick Jan 16, 2023 02:44 AM GMT
Report
325 Shares

விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இணையத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான இந்த செய்தி குறித்து விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

விஜய்யை விட்டு அவருடைய மனைவி சங்கீதா பிரிந்துவிட்டதாகவும், தற்போது தன்னுடைய பிள்ளைகளுடன் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், சங்கீதா விஜய்யுடன் சண்டை போட்டு விட்டு வெளிநாடு செல்லவில்லை, விடுமுறையை கொண்டாட வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என தகவல் வெளியானது.

ஆனால், அதுவும் எந்த அளவிற்கு தெரியவில்லை. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நெருக்கமான இடத்தில், அதாவது வீட்டின் அருகே திருமணம் ஆகாத நடிகை ஒருவர் 35 கோடிக்கு பிரம்மாண்ட வீடு ஒன்று வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த நடிகை வேறு யாருமில்லை திரிஷா தான். ஆம், நடிகை திரிஷா தான் விஜய்யின் வீட்டிற்கு அருகே 35 கோடி மதிப்புள்ள புதிய வீட்டை வாங்கி அங்கு குடிவந்துள்ளாராம்.

ஏற்கனவே கில்லி படத்தின் சமயத்தில் விஜய்க்கும் திரிஷாவிற்கும் இடையே நெருக்கமான காதல் உறவு ஏற்பட்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி நல்லபடியாக நடந்து வருகிறது.