திட்டமிட்டு மைக் மோகனின் வாழ்க்கையை சீரழித்த நடிகை!.. வெளிவந்த பல வருட ரகசியம்
80, 90 களில் டாப் நடிகராக இருந்தவர் தான் மைக் மோகன். இவர் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1977 -ம் ஆண்டு வெளியான கோகிலா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாகி வந்த மைக் மோகன் வாழ்க்கையில் இடி விழுந்தது போல் ஒரு நடிகையின் பொய்யான தகவல் வெளியானது.
பிரபல நடிகை ஒருவர் ஒருதலையாக மைக் மோகனை காதலித்துள்ளார். ஆனால் அந்த நடிகையின் காதலை இவர் ஏற்க மறுத்துள்ளார். கோபம் அடைந்த அந்த நடிகை மைக் மோகனுக்கு எய்ட்ஸ் உள்ளது என பொய்யான தகவலை பகிர்ந்துள்ளார்.
இதன் பின்னர் மைக் மோகனுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. மேலும் சில பிரபலங்கள் மைக் மோகனை சினிமாவில் வளரவிடாமல் தடுத்தார்கள் என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.