இரண்டு நடிகைகளை காரில் கூட்டி சென்ற விஜய்.. என்ன தளபதி இதெல்லாம்
vijay
pooja hegde
aparna das
rolls roycce
By Kathick
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நடிக்கின்றனர்.
இதில், இளம் நடிகை அபர்ணா தாஸ் மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர். பீஸ்ட் படத்தின் மூலமாக தான் தற்போது தமிழில் நடிகையாக அறிமுகம் ஆகிக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார்.
இதில் " என்னுடைய பிறந்தநாளை பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் தான் கொண்டாடினேன். கேக் வெட்டி முடிச்ச பிறகு, விஜய் சார் கிட்ட நடிகர் சதீஸ், உங்க ரோல்ஸ் ராய்ஸ் கார்ல எங்கள ஒரு ரவுண்டு கூட்டிகிட்டு போறீங்களானு கேட்டார். விஜய் சாரும் அதுக்கு ஓகே சொல்லி, கூட்டிகிட்டு போனாரு. நான், பூஜா ஹெக்டே, சதீஸ், மனோஜ், நெல்சன் ரோல்ஸ் ராய்ஸ்ல ஒரு ரவுண்டு போனோம் " என்று கூறியுள்ளார்.