இதுதான் நயன்தாரா உண்மை முகம்.. வெளிப்படையாக போட்டுடைத்த இயக்குநர்
ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை.
இந்த நிலையில், நயன்தாராவின் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவரவுள்ளது. நயன்தாராவின் நடித்து நேரடியாக ஓடிடிக்கு வரும் நான்காவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா குறித்து பல்வேறு கருத்துகளை திரையுலக பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர்.
அவரை பாராட்டியும், சிலர் அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியிருக்கிறார்கள். இந்த நிலையில், நடிகை நயன்தாரா குறித்து பிரபல இயக்குநர் விஷ்ணு வர்தன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் "அவங்க கெத்து தான், அது மற்றவர்களிடம் பாதிக்கப்படுவது போல் கிடையாது. நயன்தாரா ஒரு குழந்தை மாதிரி. அவருடன் பழகிய அனைவருக்கும் தெரியும், அவங்க ஒரு Perfectionist, Attitude கிடையாது" என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.