விஜய்க்காக தொடர்ந்து அந்த விஷயத்தை செய்து வரும் முன்னணி நடிகைகள்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து கடந்த மாதம் வெளிவந்து, Youtubeல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இந்த பாடலை டிக் டாக் செய்து ரசிகர்கள் பலரும் வீடியோகளை பதிவு செய்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் பலரும், அரபிக் குத்து பாடலை டிக் டாக் செய்து, விஜய் போல் நடனம் ஆடி வீடியோக்களை பதிவு செய்கிறார்கள்.
இதில், பூஜா ஹெக்டே, சமந்தா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு முன்னணி நடிகைகள் இப்படி செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
Craze ??#ArabicKuthuChallenge#PoojaHegde, #RashmikaMandanna #Samantha, #KeerthySuresh#Beast @actorvijay pic.twitter.com/z2EXAZFcTS
— Salman faris ? (@Salmanf50611223) March 11, 2022