விஜய்-அஜித் இதை செய்யாம இருந்தா! சோசியல் மீடியாவால் ரசிகர்களுக்கு அதோகதி தான்

ajith vijay fight vasuki basker
By Kathick Mar 28, 2022 08:30 PM GMT
Report

கடந்த பல வருடங்களாகவே டுவிட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. முதலில் படங்களை வைத்து சண்டை போட துவங்கிய ரசிகர்கள் அதன்பின் தகாத வார்த்தைகளையும் வைத்து பேச துவங்கினார்கள்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை தவறான பெயரை வைத்து அஜித் ரசிகர்களும், அஜித்தை தவறான பெயர்களை வைத்து விஜய் ரசிகர்களும் டுவிட்டரில் பேசி வந்தனர்.தொடர்ந்து நடந்து வரும் இந்த சண்டையால் டுவிட்டர் பக்கத்தில் பல பிரபலங்கள் கோபம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிரபல பேஷன் டிசைனர் வாசுகி பாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த சண்டையை நிறுத்த அஜித் - விஜய் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிடுங்கள் என்று கடுப்பாகி பதிவு செய்துள்ளார்.