பிக் பாஸ் 5க்கு வரும் பிரபல தயாரிப்பாளரின் அக்கா மகன்.. இரவு முழுவதும் ஹோட்டலில் பார்ட்டி

bigg boss kamal haasan varun
By Kathick Sep 26, 2021 02:37 PM GMT
Kathick

Kathick

Report

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 4 சீசன்களை கடந்து தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. வழக்கம் போல் இந்த சீசனிலும் நடிகர் கமலஹாசன் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த சீசனுக்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணத்தினால் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த முறை பிக்பாஸ் சீசன் 5-ல் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த வரிசையில் பிரபல முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கே. கணேஷின் அக்கா மகனும், நடிகருமான, வருண் கணேஷ் பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 100 நாட்கள் வீட்டிற்குள் இருக்கப்போவதால், சமீபத்தில் தனது நண்பர்களை அழைத்து இரவில் பார்ட்டி கொடுத்துள்ளாராம் வருண்.